பணம், புகழை விட மரியாதை முக்கியம்.. காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்

தமிழில் பெரிய ஹிட் ஆன காஞ்சனா பேய் படத்தினை லாரன்ஸ் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வந்தார். லட்சுமி பாம் என அதற்கு பெயர் வைத்தனர். படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

“பணம் புகழை விட மரியாதை தான் முக்கியம். பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை என்னிடம் கூட கூறாமல் வெளியிட்டுவிட்டனர். ஒரு மூன்றாம் நபர் கூறி தான் எனக்கே தெரிந்தது. நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். நான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்ட் ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன்” என லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.