சூப்பர்ஸ்டார் எழுதிய கடிதம்.. நெகிழ்ச்சியில் நடிகர் பார்த்திபன்

நடிகர் ஆர்.பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கியுள்ள ஒத்த செருப்பு படத்திற்கு இந்திய அளவில் சினிமா துறை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி பார்த்திபனை பாராட்டி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

“தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.”

“Camera, Editing, Background Music, பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்துக்கள்” என ரஜினி கூறியுள்ளார்.

இதை பார்த்திபன் நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.