ரங்கஸ்தலம் 3 நாள் பிரமாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ராம்சரண் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ரங்கஸ்தலாம், இப்படத்தை சுகுமார் இயக்க சமந்தா, ஆதி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பாராட்டதவர்களே இல்லை, அந்த அளவிற்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்,

இப்படம் முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் 43 கோடி வசூல் செய்தது, இதன் மூலம் ராம்சரண் கெரியர் பெஸ்ட் ஓப்பனிங்காக அமைந்தது.

இதில் அமெரிக்காவில் மட்டுமே 8 கோடி வசூல் செய்தது, சென்னையில் ரூ 25 லட்சம் வசூல் செய்து ஆல் டைம் நம்பர் 1 தெலுங்கு பட முதல் நாள் அதிக வசூல் சாதனை என்ற பெயரை பெற்றது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் ரங்கஸ்தலம் ரூ 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாம் உலகம் முழுவதும்.

இதில் விநியோக்ஸ்தர்கள் ஷேர் மட்டுமே 50கோடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது, எப்படியும் இப்படம் 200 கோடி கிளப்பில் இணையும் என கூறப்படுகின்றது.