ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பலநாள் ரகசியம் வெளிவந்தது

தமிழ் சினிமாவிற்கே ஒரு மைல் ஸ்டோன் படம் என்றால் ஆயிரத்தில் ஒருவன் தான், செல்வராகவன் இயக்கி கார்த்தி, ரீமாசென், பார்த்திபன், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.

பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து செல்வராகவன் அனைவரையும் பிரமிக்க வைத்திருப்பார், இப்படியும் தமிழ் சினிமாவில் எடுக்க முடியும் என்று எடுத்து காட்டியவர்.

ஆனால், அப்போது அந்த படம் ஒரு சில காரணங்களால் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்த்திபன் கதாபாத்திரத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட கதாபாத்திரம், அப்படியிருக்கையில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகரே வேறு ஒருவர் தானாம்.

அது செல்வராகவன் தம்பி பிரபல நடிகர் தனுஷ் தான் நடிப்பதாக இருந்ததாம், சோழர்களின் இளவரசராக தனுஷை நடிக்க வைக்க செல்வராகவன் முயற்சி செய்ய, ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அதில் தனுஷ் நடிக்க முடியாமல் போனதாம்.