சிம்புவின் அடுத்தப்படத்தை இயக்குவது இளம் இயக்குனரா?

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றார். சிம்பு தற்போது ரொம்பவே மாறிவிட்டார்.

படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தை விட முன்பே வருகின்றாராம், அந்த அளவிற்கு பொறுப்பாக படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், தன்னால் நஷ்டமான மைக்கல் ராயப்பன் அவர்களுக்கு அடுத்தப்படம் அவர் கேட்டால் நான் செய்து தர தயார் என்றும் கூறியுள்லார்.

இந்நிலையில் சிம்பு அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சிம்பு எப்போதும் இளம் இயக்குனர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்.

அப்படித்தான் வாலு படத்தின் மூலம் விஜய்சந்தருக்கு வாய்ப்பு கொடுக்க அவரின் அடுத்தப்படமே ஸ்கெட்ச் என்று விக்ரமுடன் இணைந்தார்.

அந்த வகையில் சிம்பு அடுத்து றெக்க படத்தின் இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே அவரிடம் ஒரு ஒன் லைன் கேட்டுள்ளதாகவும், சமீபத்தில் ரத்னசிவாவும் சிம்புவை சந்தித்து முழுக்கதையும் கேட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.