சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் இயக்குனர் விலகினாரா? அவருக்கு பதில் இந்த இயக்குனர் தான்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் ப்ரின்ஸ் என்று கூறலாம். ரஜினி, விஜய்க்கு பிறகு குடும்பங்களை திரையரங்கிற்கு கொண்டு வருவதில் கில்லாடி.

இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான், தொடர்ந்து தமிழ் சினிமாவில் சமீபத்தில் தொடர்ந்து படங்கள் ஹிட் கொடுத்த ஒரு நடிகர் இவர் தான்.

இவருடைய படங்கள் என்றாலே போட்டி போட்டுக்கொண்டு வாங்க விநியோகஸ்தர்களும் ரெடியாக உள்ளனர்.

இவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகின்றார், இப்படம் ஒரு சயின்ஸ்-பிக்சன் படம் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது, இதை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் கசிந்த தகவலின்படி இதில் விக்னேஷ் சிவன் விலக, சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஸ் கமிட் ஆகிவிட்டார் என கிசுகிசுக்கப்படுகின்றது.