சுசிலீக்ஸை போல் அடுத்து வந்த ஸ்ரீலீக்ஸ்- திரையுலகத்தினர் அச்சம்

சுசிலீக்ஸ் இந்த வார்த்தையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது, அந்த அளவிற்கு இணையத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பல நடிகர், நடிகைகள் பணத்திற்காக என்னென்ன செய்கின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இவ்வருடம் சில முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அடுத்து வரிசையாக நிறைய நடிகர்களின் படங்கள், அதுவும் ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பார்க்கும் படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். இன்னும் 2,3 நாட்களில் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வருடம் தமிழ் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியாக்கிய ஒரு விஷயம் என்றால் சுசி லீக்ஸ். இதனை போல தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற ஒன்று உருவாகியுள்ளது.

அதாவது தெலுங்கு பட நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு திரையுலக பிரபலங்கள் சிலருக்கும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.

பட ஆசை காட்டி தன்னை மோசம் செய்த திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டப் போவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்

வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைப்பவர்களை வெளிக்காட்டாமல் விட மாட்டேன் என்று கூறிவருகிறார். இதனால் திரையுலகத்தினர் பலரும் அதிர்ச்சியில் தான் உள்ளனர்.