விஜய், அஜித்தையே பின்னுக்கு தள்ளிய சூர்யா

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்றால் விஜய், அஜித், சூர்யா தான். அந்த வகையில் சூர்யாவின் மார்க்கெட் சமீப காலமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஆனால், யு-டியூபில் சூர்யா ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளார், இந்த நிலையில் மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை 41 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இது தான் தமிழ் சினிமாவில் அதிகம் பேர் பார்த்த பாடல்(ஆடியோ) என்று இருந்தது, தற்போது இதை சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் சொடுக்கு பாடல் முறியடித்துள்ளது.

சொடுக்கு பாடலும் 41 மில்லியன் தாண்டினாலும், சில ஆயிரங்கள் வித்தியாசத்தில் விஜய்யை சூர்யா பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதன் மூலம் தற்போது யு-டியூப் ஆடியோ பாடலில் சூர்யா நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார். அஜித்தின் ஆலுமா டோலுமா, சர்வைவா ஆகிய பாடல் வரிகள் ஒரு கோடி ஹிட்ஸை மட்டும் கடந்தது குறிப்பிடத்தக்கது.