விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா நேற்று சரப்ரைசாக ஒரு பரிசை கொடுத்துள்ளார்.

TSK வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு இன்னோவா காரை சூர்யா பரிசளித்துள்ளார். இதற்காக சூர்யாவிற்கு ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

“யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம். உங்களின் இந்த அன்புக்கு நான் தகுதியானவன் தானா என தெரியவில்லை” என அவர் ட்விட்டியுள்ளார்.

சி3 படத்திற்காக சூர்யா இயக்குனர் ஹரிக்கு ஒரு Fortuner காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுறமிருக்க தானா சேர்ந்த கூட்டம் பிளாப் ஆனதை மறைக்கத்தான் சூர்யா காரை வாங்கி கொடுத்துள்ளார் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.