தல அஜித் எப்போதும் நல்ல இயக்குனர்களை பாராட்டுபவர், இவர் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்திலேயே தான் நடித்து வருகின்றார்.
வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் என்ற படம் தயாராகி வருகிறது.
நாளுக்கு நாள் படத்தை பற்றிய செய்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
ஆனால் ரசிகர்களோ ஒரே இயக்குனருடன் அஜித் கூட்டணி அமைக்கிறாரே என்று வருத்தப்பட்டனர், சிலர் சிவாவை மோசமாகவும் கிண்டலடித்து வந்தனர்.
இயக்குனர் சிவா ரசிகர்களால் கலாய்க்கப்படுவது குறித்து அஜித் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம், சிவா என்னுடன் கடந்த 8 வருடங்களாக இந்த சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய முழு கவனமும் சினிமா பற்றி தான் வேறு எதைப்பற்றியும் கிடையாது என்று கூறியுள்ளார்.