அஜித்தின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! – ரசிகர்கள் கொண்டாட்டம்

Thala Ajith to team up with Sathuranga Vettai and Theeran Adhigaaram Ondru fame director Vinodh. The project is yet to be confirmed officially.

நடிகர் தல அஜித்குமார் விரைவில் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கத்துவங்கவுள்ளார். படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இயக்குனர் சிவா கதையை திருத்தியமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படம் (தல 59) பற்றிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஹிட் படங்களை கொடுத்த வினோத் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

வினோத் தற்போது கதையை முடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.