இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா, டிக் டிக் டிக் சாதனை

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் டிக் டிக் டிக். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை தான், முதல் நாள் சுமாரான ஓப்பனிங் இருந்தாலும் இரண்டாவது நாள் வசூல் வேற லெவல் என்று கூறப்படுகின்றது.

டிக் டிக் டிக் முதல் நாள் ரூ 4 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்ய, இரண்டாம் நாள் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.16 கோடி வரை வசூல் செய்துள்ளது, ரவி திரைப்பயணத்திலேயே அதிக ஓப்பனிங் வசூல் இது தானாம்.