தனுஷ்-பாலாஜி மோகன் கூட்டணியில் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
நடிகை வரலட்சுமிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போது வந்துள்ள தகவல்படி வரலக்ஷ்மி கலெக்டராக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கும் நிலையில், வரலஷ்மியும் நெகடிவ் வேடத்தில் தான் நடிக்கிறார் என தகவல் முன்பு பரவிய நிலையில் அவர் அதை மறுத்தது குறிப்பிடத்தக்கது.