அவருக்கு மட்டும் என்ன தனி சட்டமா?விஜய்க்கு எதிராக கொந்தளித்த நடிகர்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், அவர் ஒரு முடிவு எடுத்தால் அதற்கு தலை ஆட்ட பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் செய்த ஒரு விஷயம் அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா பேசுகையில், கடிதம் கொடுத்தால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்று கூறுகிறார்கள். என்னது இது, தயாரிப்பாளருக்கு ஒரு கடிதம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆக போகிறது. இதுஎல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருக்கமாட்டார்கள் அதனால் படப்பிடிப்பு நடக்கிறது என்கிறார்கள். எல்லோரும் ஒரு பிரச்சனைக்காக போராடும் போது சில படங்களுக்கு மட்டும் இந்த சலுகை ஏற்றுக் கொள்ள முடியாதது.

விஜய் அவர்கள் அடுத்த மாதம் தேதி கொடுக்கிறார் என்றால் ஸ்டண்ட் மாஸ்டர்களால் கொடுக்க முடியாதா, கண்டிப்பாக அவர்கள் கொடுப்பார்கள். சமுத்திரக்கனி படத்துக்கு அனுமதி கொடுத்தது சரி தான், ஒரே நாளில் அவர்களது படப்பிடிப்பு முடிந்துவிடும், அதோடு அவர்கள் சின்ன பட்ஜெட்டில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். ஆனால் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு முடிய 3 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களால் ஏன் நிறுத்த முடியவில்லை.

விஜய் 62வது படத்துக்கு அனுமதி கொடுத்தால் மற்ற படங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. இயக்குனர் கண்ணம் Boomerang படத்துக்காக நீண்ட நாட்களாக அனுமதி கேட்ட தயாரிப்பாளர் சங்கம் இதுவரை பதில் கொடுக்கவில்லை.

கொடுத்தால் எல்லோருக்கும் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லையெனில் யாருக்கும் அனுமதிக்கக்கூடாது என்று மனோ பாலா பேசியுள்ளார்.

மேலும், இதற்கு போன் போராட்டால் தான் இவன் தந்திரன் கன்னன் இயக்கிய படம் தோல்வியை தழுவியது, அதன் மூலம் அவருக்கு பெரிய நஷ்டமும் கிடைத்தது குறிப்பிடத்தகக்கது.