விஜய்-முருகதாஸ் படத்தின் கதை இது தான், ரசிகர்களுக்கு சரவெடி தான்

விஜய் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு வித சந்தோஷம் அனைவரிடத்தில் தொற்றிக்கொள்ளும், நம்பி இவர் படத்திற்கு போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அது மட்டுமின்றி இவரின் படங்களில் ஏதாவது சமூகத்திற்கான நல்ல விஷயங்கள் படத்தில் இருக்கும் என்றும் நம்பி செல்கின்றனர். விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் அறிவித்திருப்பதால் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இப்படத்தை கதை என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்த ஒரு கதையாம், கருப்பையா என்பவர் ஒரு கட்சியின் தலைவராகவும், ராதாரவி MLAவாகவும் நடிக்கிறாராம்.

ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்க படத்தின் காட்சிகளை தமிழ்நாட்டை தாண்டி எடுக்க படக்குழு முடிவு செய்தார்களாம். ஆனால் விஜய் இங்குள்ள தொழிலாளர்களை மனதில் வைத்து விஜய் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த கூறியிருக்கிறாராம்.

மேலும், இந்த படம் ரசிகர்களுக்கு செம்ம சரவெடியாக தீபாவளிக்கு வருவது உறுதி என கூறப்பட்டுள்ளது.