நெல்சன் – விஜய் கூட்டணி உறுதியானது! வீடியோவுடன் தளபதி 65 அறிவித்த சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பட ரிலீசுக்காக தற்போது காத்திருந்தாலும், அடுத்து தளபதி நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று தான் காத்திருந்தார்கள்.

அதை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது சன் பிக்சர்ஸ் தளபதி 65 அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய படங்களை இயக்கி உள்ள நெல்சன் உடன் தான் விஜய் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

இந்த கூட்டணி பற்றிய செய்தி முன்பே வந்திருந்தாலும் தற்போது அது அதிகாரபூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

தளபதி ரசிகர்கள் இந்த அறிவிப்பை தற்போது ட்விட்டரில் ட்ரெண்டு செய்து அதிரடி காட்டி வருகிறார்கள்.