வடிவேலுவே நடிக்க மறுத்த படம் ஆனால் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன கதை தெரியுமா

தளபதி விஜய் எப்போதும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக எடுப்பவர், இவர் எந்த ஒரு முடிவையும் தற்போதெல்லாம் தனிப்பட்ட முறையில் தான் யோசித்து எடுத்து வருகின்றார்.

ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் வரை தன் தந்தையின் பேச்சை கேட்காமல் எதையும் செய்ய மாட்டார், இதில் பல முடிவுகள் தவறனதாக இருந்தாலும் தந்தை சொல்லே விஜய்க்கு மந்திரம்.

அப்படி விஜய் மார்க்கெட் மிகவும் கீழே இருந்த சமயத்தில் ஏதாவது ஒரு ஹிட்டிற்காக காத்திருந்தார், அப்போது இயக்குனர் எழில் வடிவேலுவிடம் துள்ளாத மனம் துள்ளும் கதையை கூறியுள்ளார்.

வடிவேலு அண்ணே இது நமக்கு செட் ஆகாதுன்னே என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம், இந்த கதை எப்படியோ விஜய் கைகளுக்கு சென்றுள்ளது.

விஜய் இது மிகவும் பிடித்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டார், அப்போது பலரும் வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் இவர் ஏன் நடிக்கின்றார் என பலரும் கிண்டல் செய்தனர்.

ஆனால், படம் வெளிவந்து சுமார் 250 நாட்கள் ஓடி மெகா ஹிட் அடித்து பேசியவர்கள் வாயை அடைத்தது, இது தான் துள்ளாத மனம் துள்ளும் படம் வளர்ந்த கதை.