விஜய்யுடன் இணையும் மசாலா மன்னன் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்யுடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் வெயிட்டிங், ஆனால், அட்லீ, முருகதாஸிற்கே இந்த வாய்ப்பு அடிக்கடி அமைகின்றது.

அந்த வகையில் முருகதாஸ் படத்தை முடித்து விஜய் அடுத்து மோகன்ராஜா, அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று கிசுகிசுக்கப்பட்டது, ஆனால், தற்போது வந்துள்ள செய்தியே வேறு.

பல வருடங்களாக விஜய் இயக்குனர் ஹரியுடன் கைக்கோர்க்க வேண்டும் என்பது விருப்பமாம்.

சிங்கம்-2 முடிந்த பிறகே இந்த கூட்டணி இணைவதாக இருந்து ஒரு சில காரணங்களால் முடியாமல் போனதாம்.

அதுமட்டுமின்றி அடுத்தப்படம் கூட விஜய் ஹரியுடன் இணையலாம் என்று ப்ளான் போட, அதற்குள் சூர்யா ஹரியுடன் கூட்டணி வைத்துவிட்டாராம்.

இதனால், விஜய் முருகதாஸ் படம் முடிந்து அடுத்து வேறு ஒருவர் இயக்கத்தில் தான் நடிக்கப்போகின்றாராம், அந்த படம் முடிந்த கையோடு விஜய்-ஹரி கூட்டணி உறுதி என கூறப்படுகின்றது.