விஜய் கூடவே பயணிக்கிறேன்: தளபதி62 படம் பற்றிய புதிய தகவலை சொன்ன விக்ரம் வேதா பிரேம்

விக்ரம் வேதா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தவர் நடிகர் பிரேம். இவர் அடுத்து தளபதி விஜய்யின் அடுத்த படமான விஜய்62ல் நடித்து வருகிறார்.

இது பற்றி பேட்டியளித்துள்ள அவர் “நான் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் பாத்திரம் முழுமையான பாத்திரமாக இருக்கும். என் பெரும்பாலான காட்சிகள் விஜய் கூடவே இருக்கும்.அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.”

“ஏற்கனவே சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். இந்த மாத இறுதியில் மீண்டும் ஷூட்டிங் செல்கிறேன்” என பிரேம் தெரிவித்துள்ளார்.