மங்காத்தா-2 ரெடியா? யார் எடுக்கிறது தெரியுமா???

அஜித் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார், இப்படம் 100 கோடி வரை வசூல் செய்தது.

இந்த நிலையில் அஜித் அடுத்து போனிகபூர் தயாரிக்கும் படத்தில் கூட இவர் நடிக்கலாம் என்று பல செய்திகள் உலா வந்தது, இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது.

அஜித்தின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இதற்கு முன் அஜித் நடித்த மங்காத்தா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் மங்காத்தா 2வாக கூட இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.