காலாக்கு ஒரு நியாயம், மெர்சலுக்கு ஒரு நியாயமா- கொந்தளித்த ரசிகர்கள்

மெர்சல் தளபதி நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழசை எதிர்த்தார், ஆனால் இப்போது காலாவில் படம் முழுவதும் அவருடைய கட்சியை விமர்சித்துள்ளனர்.

இன்று காலா படத்தை பார்த்த தமிழிசை பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “காதல், ஆடல், பாடலையும் தாண்டி சமூக கருத்துக் கொண்ட படம் எனக்கு பிடிக்கும். அதனால் தான் காலா படம் பார்க்க வந்தேன்” என அவர் கூறினார்.

அவரின் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தாலும் அவர் அலட்சியமாக பதில் சொல்லியிருப்பது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.