சார் ப்ளீஷ், ஷங்கரிடம் கெஞ்சிய விக்ரம்- எதற்காக?

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் படங்கள் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் இதுவரை எடுத்த அனைத்து படங்களையும் ஹிட் கொடுத்த இயக்குனர் என்றால் ஷங்கர் தான்.

ஷங்கர் இயக்கத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பது தான் விக்ரமின் நீண்ட நாள் ஆசையாம்.

ஆனால், ஷங்கருடன் இரண்டு படத்தில் பணியாற்றி விட்டார் விக்ரம், இந்த இரண்டு படங்களுக்குமே அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

இந்த நிலையில் காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் கொடுத்ததே விக்ரம் தான், அப்போது டப்பிங் முடிந்தவுடன் ஷங்கரிடம் சார் உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என்று விக்ரம் கெஞ்சியுள்ளாராம்.

அப்போது விக்ரம் கூட நினைத்திருக்க மாட்டார், இரண்டு படங்களில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்போம் என்று.

இன்று ஷங்கரே தான் நாயகர்களில் விக்ரம் மிகவும் சிறந்தவர் என்று பாராட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.