தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி ;தளம் ஒன்றில் நேரடியாக ரிலீஸ் ஆனது ஜகமே தந்திரம் பாடம். பெரிய அளவில் விளம்பரப்படுத்தத்தப்பட்ட இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. கார்த்திக்கு சுப்புராஜ் தான் இயக்குனர் என்பதும் ஒரு காரணம்.
ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் நெகடிவ் விமரிசனத்தை கொடுத்து வருகின்றனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சமூக வலைத்தளங்களிலும் விமர்சனம் அதிகம் வருவதை பார்க்கமுடிந்தது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையை சூப்பராக வைத்து படம் எடுத்த காலம் போய் தற்போது மாஸ் ஹீரோவுக்காக வழக்கமான கதையை எடுக்கிறார் எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இப்படி ஜகமே தந்திரம் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருவது பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் சூசகமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். “Success is not Victory. Failure is not DEFEAT. KEEP MOVING :)” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால் ஜகமே தந்திரம் தோல்வி என்பதை ஒரே ஒப்புக்கொள்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Success is not Victory
Failure is not DEFEATKEEP MOVING 🙂 pic.twitter.com/nFXzOrVH9K
— Sash (@sash041075) June 21, 2021