விருது விழாவில் தொடர்ந்து நடக்கும் சர்ச்சை, யுவன் ரசிகர்கள் கோபம்

யுவன் சினிமாவில் எப்படி ஹீரோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றார்களோ, அதே போல் இசை துறையில் இருக்கும் இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர்.

ஆனால் காற்று வெளியிடை, மாம் படத்திற்காக ரகுமானுக்கு தேசிய விருது கொடுத்துள்ளனர். இவை யுவன் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜுரிக்கு இளையராஜா ரகுமான் தவிர வேறு யாரையும் தெரியாதா, தரமணிக்கு என்ன குறை, தேசிய விருதில் தொடர்ந்து பாலிடிக்ஸ் நடந்து வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி தற்போது நடக்கவிருக்கும் விஜய் விருது விழாவில் யுவன் பாடல்கள் நாமினி கூட ஆகதது ரசிகர்களுக்கு செம்ம கோபத்தை தந்துள்ளது.