ஆர்யாவின் கைகளை பிடித்து கதறிய அபர்னிதியின் அம்மா

ஆர்யா இப்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார், இதில் 19 பெண்கள் வரை கலந்துக்கொண்டு தற்போது பலரும் எலிமினேட் ஆகியுள்ளானர்.

இதை தொடர்ந்து இறுதிபோட்டி எட்டும் தருவாயில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்து வருகின்றது. . எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தற்போது 5 பெண்கள் அவரை இம்ப்ரெஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா அபர்ணதியின் வீட்டுக்கு சென்றார். அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களுடன் ஆர்யா கொஞ்ச நேரம் தனியாக உரையாடினார். அபர்ணதியின் அம்மா ஆர்யாவிடம் எமோஷனலாக பேசினார். “எனக்கு ஆண் குழந்தை இல்லை. பெண் குழந்தைகள் தான் என்பதால் மிகவும் பாதுகாப்பாக வளர்த்தோம். வீட்டை விட்டு வெளியில் தனியாக விடமாட்டோம்.

என் கணவர் எப்போதும் வேலைக்காக வெளியில் தான் இருப்பார். அதனால் எங்களுக்கு வரும் மருமகன் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எங்களை பார்த்துக்கொள்ளவேண்டும்’ என கண்ணீர் விட்டு அழுதார். ஆர்யாவும் ‘நான் நிச்சயம் இருப்பேன்’ என கூறி சமாதானம் செய்தார்.