ஆர்யா செய்த விஷயம், கதறி அழுத அபர்ணதி

ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்திவ் வருகின்றார். இந்த நிக்ழ்ச்சி தற்போது தமிழகம் முழுவதும் செம்ம பேமஸ்.

ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள 16 பெண்கள் கலந்துக்கொண்டு தற்போது 9 பெண்கள் மட்டுமே உள்ளனர், இதில் அபர்ணதி என்பவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

ஆர்யாவுடன் நெருக்கமாக இருப்பது, பேசுவது என இவரை சுற்றி பல சர்ச்சைகள் இருந்துக்கொண்டே இருக்கும், சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டி கொடுத்து வருகின்றார்.

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இருந்து ஆர்யா வெற்றியாளரை, தன் மனம் கவர்ந்தவரை தேர்வு செய்து அவர்களுடன் தனியாக நேரம் செலவிட்டு வருகிறார்.

அண்மையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அப்பெண்களை பற்றி ஆர்யா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை எல்லா பெண்களும் படித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால் அந்நிகழ்ச்சியில் அனைவராலும் கவனிக்கப்படும் அபர்ணதி கடிதத்தை படித்ததும் தேம்பி தேம்பி அழுதுள்ளார். எல்லோரிடமும் இருந்து தனியாக போராடி வருகிறீர்கள், அது எனக்காக தான் என்று தெரிகிறது என்று ஆர்யா எழுதியதை படித்ததும் அவர் அழுதுவிட்டார்.