ஆர்யாவின் நிகழ்ச்சி இன்னும் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வருமோ தெரியவில்லை, ஆர்யா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.
இதில் கலந்துக்கொண்டு தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்துக்கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சிக்கு வின்னப்பிக்க, அதிலிருந்து 16 பேரை தேர்ந்தெடுத்து போட்டியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபர்னிதி குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அபர்னிதி இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மனிஷ் யஷ் என்பவரை காதலித்துள்ளார்.
ஆர்யாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரை கழற்றிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
இதில் அபர்னதியை நினைத்து மனிஷ் யஷ் ஃபேஸ்புக்கில் சோக போஸ்ட்டுகள் போட்டு வந்துள்ளார். அபர்னதி மறுபடியும் தன்னிடம் திரும்பி வருவார் என்று நம்புவதாக மனிஷ் தெரிவித்துள்ளார்.
மனிஷ் பிப்ரவரி மாதம் 12ம் தேதியில் இருந்து காதல் தோல்வி குறித்து தன் பேஸ்புக்கில் காதல் தோல்வி கருத்து கூறி பீல் செய்து வருகின்றார். அபர்னதி தன்னிடம் காட்டிய காதலை டிவியில் ஆர்யாவிடம் காட்டுவதை பார்த்து வேதனை அடைந்துள்ளார் மனிஷ்.