ஊரையே ஏமாற்றிய ஆர்யா, எங்க வீட்டு மாப்பிள்ளை திருமண கூத்து ஆதாரத்துடன் அம்பலம்

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இப்போது சீதாலட்சுமி, அகாதா, சுசானா என்ற மூன்று பெண்கள் இறுதி கட்டத்தில் உள்ளனர்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெளியேறியவர்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர், தற்போது மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்த போட்டியில் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் அபர்னிதி, அவரின் தங்கை சமீபத்தில் தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்யா கடைசியில் யாரையுமே திருமணம் செய்துக்கொள்ளவில்லையாம், அதை அபர்னிதி தங்கை ஆர்யாவுடன் எடுத்த புகைப்படத்துடன் இதை போட்டு உடைத்துள்ளார்.

இப்படியான நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது, பிறகு எதற்கு இப்படி நிகழ்ச்சி நடத்தி ஊரை ஏமாற்ற வேண்டும் என ரசிகர்கள் செல்ல கடுப்பில் உள்ளனர்.