எல்லை மீறிய ஆபாசத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை, ரசிகர்கள் கோபம்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி செம்ம சூடு பிடித்துள்ளாது, பைனல் ரவுண்டை நெருங்கும் இந்த நேரத்தில் யார் ஆர்யாவுடன் கரம்பிடிப்பார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த எபிசோட்டில் ஆர்யாவுடன் நடனமாடி போட்டியாளர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்ற போட்டி ஷெரிப் மாஸ்டர் தலைமையில் நடந்தது.

இதில் எந்த போட்டியாளருக்கு மிக த்தரூபமாக கெமிஸ்ட்ரி அமைகிறதோ அந்த போட்டியாளருக்கு ஆர்யாவுடன் கடைசி Token Of Love கிடைக்கும்.

இதில் ஷெரிப் மாஸ்டர் அகாத்தா தேர்வு செய்தார், இதன் மூலம் அகாத்தாவுக்கு Token Of Love இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து இந்த நடனத்தில் ஆர்யாவிற்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது என ஆபாசத்தின் உச்சிக்கு இந்த நிகழ்ச்சி சென்றது, இது பார்ப்போர்கள் ஒரு சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது.