எங்க வீட்டு மாப்பிள்ளை – கடைசி நாளில் ஆர்யா அடித்த பல்டி! ரசிகர்கள் ஷாக்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நேற்று இறுதி நாள் என்பதால் ஆர்யா யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

சுசானா, சீதா லட்சுமி, அகாதா ஆகிய மூன்று பெண்கள் இறுதி சுற்றில் இருந்தனர். இவர்கள் மூவரில் ஒருவரை தான் ஆர்யா திருமணம் செய்வதாக அறிவிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

காரணம் ஆர்யா தான் யாரையும் இப்போது புண்படுத்த விரும்பவில்லை என கூறி யாரையும் செலக்ட் செய்யாமல் பல்டி அடித்ததுதான்.

ஆர்யா கூறியதாவது..

“என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!”