எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு இலங்கையில் நடந்த விபரீதம்- அதிர்ச்சி தகவல்

ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார், இது அனைவரும் அறிந்ததே, இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆர்யா யாரை திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க ஷூட்டிங் எடுக்கப்பட்டதாம். பின் இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார்.

அங்கும் சில தடைகளாம். தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதால் ஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் இதை பற்றி பேசவே கூடாது என கெடுபிடி போட்டு தான் அனுமதி கொடுத்தார்களாம்.

அதோடு கூடவே ஒரு சிங்கள ராணுவ வீரரை மாற்று உடையில் அனுப்பினார்களாம். அதோடு இலங்கையில் ஷூட்டிங் நடந்த போது சில எதிர்ப்புகள். இந்த இடம் மிக முக்கியமான இடமாம்.

அங்கு தான் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துறைக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். மக்கள் பலரும் திகிலான போர் அனுபவங்களை கேமராவுக்கு பின்னால் பதிவு செய்தார்களாம்.

இந்த வீடியோவை வெளியிட்டால் மக்களுக்கு பிரச்சனை என்பதால் விட்டுவிட்டார்களாம்.