ஆர்யாவிடம் கண்ணீர் விட்டு கதறிய ஸ்வேதா பாட்டி

ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இவருக்கு நீண்ட வருடங்களாக திருமணமாகவில்லை, இதனால் பாலிவுட் ஸ்டைலில் ஒரு முடிவெடுத்தார்.

பாலிவுட்டில் ராக்கிசவுத், மல்லிக சரவெத் ஆகியோர் சுயவரம் போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினர், அப்படித்தான் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போவதாக ஆர்யாவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அபர்ணதி வீட்டுக்கு சென்றது போல இன்று ஸ்வேதாவின் வீட்டிற்கு ஆர்யா சென்றார். அப்போது அவரின் குடும்பத்தினரிடமும் ஆர்யா மனதுவிட்டு பேசினார்.

அப்போது ஆர்யாவிடம் பேசிய ஸ்வேதாவின் பாட்டி ஆர்யாவை பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார். அவளின் அம்மா 14 வருடமாக கணவரை பிரிந்து எங்களுடன் தான் இருக்கிறார்.

ஸ்வேதாவிற்கு அதிகம் செல்லம் கொடுத்துவிட்டோம் அதனால் அப்படி இப்படி அதிகம் பேசுவார். அவள் அம்மா போல அவள் வாழ்க்கை மாறிவிட கூடாது என பாட்டி கூறினார்.