நிகழ்ச்சி முடிந்து ஆர்யா ஒரு பெண்ணிடம் மட்டும் செய்த வேலை- ரசிகர்கள் கோபம்

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி எப்படியோ ஒரு முடிவிற்கு வந்தது. எல்லோரும் நேற்று ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இதில் மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டுவரும் நிலையில் ஆர்யா கடைசியில் ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் யாருக்கு அணிவிப்பார் என இறுதிவரை பரபரப்பாகவே இருந்தது.

பைனலுக்கு வந்திருந்தவர்கள் பலரும் ஆர்யா அகாதாவை திருமணம் செய்துகொள்வார் என கணித்தனர். ஆனால் ஆர்யா அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு முடிவை அறிவித்தார்.

என்னோட வாழ்க்கையை முடிவு செய்ய அறிவிக்கப்பட்ட இந்த ஷோவில், இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க.

என்னோட மனம் விட்டு பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே அறிவிப்பேன் என ஆர்யா கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி நிகழ்ச்சி முடிந்தபிறகு ஆர்யா சீதாலட்சுமிக்கு மட்டும் ஒரு கிப்ட் கொடுத்துள்ளார். இதுவரை எனக்கு டோக்கன் ஆஃப் லவ் ஆர்யா கொடுத்தது இல்லை என சீதாலட்சுமி தொடர்ந்து வருத்தப்பட்டு வந்ததால், இன்று ஆர்யா அவருக்கு அதை பரிசளித்துள்ளார்.

இதை சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.