ஆர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் இவர் நீண்ட வருடங்களாக பெண் பார்த்து வருகின்றார், ஆனால் அவருடைய தேவைக்கு ஏற்றது போல் எந்த பெண்ணும் கிடைக்கவில்லை.
அப்படியிருக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் தனக்கு ஏற்ற பெண்ணை அவர் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸியங்கள் நிறைந்ததாக உள்ளது, பலரும் தற்போது இதை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் சில எபிசோட்ஸ் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் ஒன்றில் எடுத்துள்ளனர்.
ஆனால், அனுமதி வாங்காமல் இந்த படப்பிடிப்பை எடுக்க, ஆர்யா அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டது.
பிறகு வாசகர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அங்கு பணியாற்றுவோர்களே ஆர்யாவிற்கு ஆதரவாக தான் செயல்பட்டனர்.
இதனால், சில மணி நேரத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட, பிறகு வழக்கம் போல் அவருடைய ரசிகர்கள் எல்லாம் வந்து ஆர்யாவுடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.
ஆனால், பெர்மிஷன் வாங்காமால் ஆர்யா இப்படி படப்பிடிப்பு நடத்தியது அங்கிருந்து அனைவருக்குமே கொஞ்சம் அதிருப்தியை தான் கொடுத்துள்ளது.