எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் முதன் முறையாக கண் கலங்கிய ஆர்யா

ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவர் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

தொகுத்து வழங்குதல் என்றால் நிகழ்ச்சியை நடத்துவது இல்லை, இந்த நிகழ்ச்சியே இவரை வைத்து தான் நடந்து வருகின்றது.

இந்த போட்டியில் 19 பெண்கள் கலந்துக்கொள்வார்கள், அதில் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்வோரை அவர் திருமணம் செய்துக்கொள்வார்கள்.

இந்த நிலையில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி சென்று வருகின்றனர், அந்த வகையில் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் சமீபத்தில் நடந்த எபிசோடில் யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என நேற்றே அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தது போல குஹாசினி தான் வெளியேற்றப்பட்டார். அவரும் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சந்தோசமாக அனைவருக்கும் கடைசியாக ஒருமுறை கட்டியணைத்து விடைபெற்று சென்றார்.

அதை பார்த்த ஆர்யாவுக்கு தான் கொஞ்சம் கண்கலங்கியது. ஆர்யா இந்த நிகழ்ச்சியில் முதன் முறையாக கண்கலங்கியது இப்போது தான்.