கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் அக்டோபர் 4ம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பை துவங்க உள்ளது. பிரம்மாண்ட ஓப்பனிங் ஷோ ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக பரபரப்பாக ஓடிய இந்த ஷோவில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அனைத்து போட்டியாளர்களும் உறுதி செய்யப்பட்டு தற்போது அவர்கள் அனைவரும் ஹோட்டலில் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கொரோன சோதனை அவர்களுக்கு பல முறை செய்யப்பட உள்ளது. கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே அவர்கள் வீட்டுக்குள் அனுப்பபடுவார்கள்.
பிக் பாஸ் வீட்டுக்குள் போகப் போகும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..
1. ஷிவானி நாராயணன்
2. அறந்தாங்கி நிஷா
3. ரம்யா பாண்டியன்
4. ரியோ ராஜ் (சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர்)
5. அனிதா சம்பத் (செய்தி வாசிப்பாளர்)
6. அர்ச்சனா (தொகுப்பாளர்)
7. ரேகா
8. பாலாஜி முருகதாஸ்
9. ஆரி
10. ஜித்தன் ரமேஷ்
11. ஆஜித் காலிக் (பாடகர்)
12. சனம் ஷெட்டி
13. கேப்ரியலா