பிக்பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரியாக சர்ச்சை நடிகை – லீக் ஆன முக்கிய ஆதாரம்

கமல்ஹாசனின் பிக்பாஸ் 3 பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஆபாசம், காதல் விஷயங்கள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சி பற்றி கடும் விமர்சனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஒரு புதிய போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார்.

பல பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரி வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார் என உறுதியாகியுள்ளது. விஜய் டிவி டீமுடன் கஸ்தூரி செய்த சாட் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது. அதில் அவர் 4ம் தேதி வருவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை கஸ்தூரி தான் ட்விட்டரில் வெளியிட்டார். ஆனால் உடனே அதை நீக்கிவிட்டார்.