எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் கலர்ஸ் தொலைக்காட்சிக்கு கிடைத்த பிரமாண்ட TRP

ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார், இதில் தனக்கு பிடித்த குணாதிசியங்கள் உள்ள பெண்ணை அவரே தேர்ந்தெடுப்பது போல் தான் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி தற்போது உச்சக்கட்ட சுவாரசியத்தை அடைந்துள்ளது, ஆர்யா யாரை திருமணம் செய்துக்கொள்வார் என்று பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும் கலர்ஸ் தொலைக்காட்சி இதன் மூலம் செம்ம TRPயை கண்டுள்ளது.

இந்த ஒரே நிகழ்ச்சி மூலம் கலர்ஸ்ட் டிவி இந்திய அளவில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது, இவை ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் ஆர்யா தற்போது அனைத்து போட்டியாளர்கள் வீட்டிற்கும் செல்ல, அங்கு அவர்கள் அழுவது TRPக்கு இன்னும் வலு சேர்த்துள்ளது.

ஆனால், வழக்கம் போல் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் சன் டிவியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.