கோமணம் கட்டிடுவேன்.. கேமரா இருக்குனு பாக்க மாட்டேன்: பிக் பாஸை எச்சரித்த ஜிபி முத்து

ஜிபி முத்து தான் தற்போது பிக் பாஸ் 6ம் சீசன் மோஸ்ட் ட்ரெண்டிங் போட்டியாளர். அவரது அப்பாவித்தனத்தை வைத்து மற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து அவரை கலாய்த்தாலும், அவர் தான் தற்போது ரசிகர்களை என்டர்டெய்ன் செய்து வருகிறார்.

கமல்ஹாசனுடன் ஜிபி முத்துவிடம் பேசும்போது கிடைக்கும் ரெஸ்பான்ஸும் தொடர்ந்து வைரல் ஆகிறது. ‘ஆதாமா?’ என ஒரே விஷயத்தை கேட்டு ஜிபி முத்து ட்ரெண்ட் ஆகிவிட்டார்.

அவர் தான் தற்போது நம்பர் 1 போட்டியாளர் என ORMAX மீடியா ரேட்டிங் வழங்கி இருக்கிறது. தற்போது ஜிபி முத்து லேட்டஸ்ட் எபிசோடில் பிக் பாஸை எச்சரித்து பேசி இருக்கிறார்.

ட்ரெஸ் அனுப்புங்க.. மிரட்டிய ஜிபி முத்து

அவரது டிரஸ் இன்னும் வரவில்லையாம், அதை உடனே அனுப்புங்க என கேட்டு தான் ஜிபி முத்து பேசினார்.

“என் டிரஸ் உடனே அனுப்புங்க, இல்லனா மேல டீ சர்ட் போட்டுட்டு, கீழ கோவணம் கட்டிப்பேன். கேமெரா இருக்குனு பாக்க மாட்டேன், என் கேரக்டரே வேற. ட்ரெஸ் அனுப்புங்க.. ” என ஜிபி முத்து கூறி இருக்கிறார்.