5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியேறினாரா கவின்? பிக்பாஸ் பரபரப்பு டீஸர்

சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் பிக்பாஸ் சீசன் 3ல் இறுதி 6 போட்டியாளர்களின் ஒருவராக உள்ளார். தனக்கு ஜெயிக்க ஆசை இல்லை, தர்ஷன்-மூகின் போன்றவர்கள் ஜெயிக்கட்டும் என அவர் அடிக்கடி கூறி வருகிறார்.

இந்நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறுபவர்கள் வெளியேறலாம் என வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கவின் வெளியேறும் முனைப்பில் எழுந்து நிற்கிறார். மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இது தற்போது வந்துள்ள புதிய டீசரில் காட்டப்பட்டுள்ளது.