லாஸ்லியாவை அசிங்கப்படுத்திய பிக்பாஸ்.. இன்றைய 4வது ப்ரோமோ

பிக்பாஸ் 3வது சீசன் இன்று 84வது நாளை எட்டியுள்ளது. அதில் லாஸ்லியா முக்கிய போட்டியாளராக உள்ளார்.

சென்ற வாராம் அவரது அப்பா உட்பட குடும்ப உறுப்பினர்கள் வீட்டுக்குள் வந்து காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

இன்று (15.09.2019) வந்துள்ள புதிய பிக்பாஸ் ப்ரோமோவில் லாஸ்லியாவை பிக்பாஸ் அசிங்கப்படுத்தியுள்ளது காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிக்பாஸ் விதிகள் பலவற்றை லாஸ்லியா மீறி வருகிறார். ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என கூறி தர்ஷனிடம் அவர் சண்டை போட்டுள்ளார். அப்போது மைக்கை பெட்சீட் உடன் உரசாமல் வையுங்கள் என சத்தமாக அறிவிப்பு வருகிறது.

தர்ஷன் உட்பட மற்ற போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.