பிக்பாஸில் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா.. அதிர்ச்சி காரணம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் பரபரப்பாக எதாவது நடந்துகொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள் இடையே கடந்த சில நாட்களாக சண்டை நடந்துவரும் நிலையில் மதுமிதா தன்னுடைய கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவர் கேப்டனாக இருந்தால் நாங்கள் இருக்கமாட்டோம் என மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறியது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். தன்னுடைய கருத்தை பதியவைக்க அப்போது இருந்த கோபத்தில் இப்படி செய்துகொண்டதாக மதுமிதா தெரிவித்துளளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு மதுமிதாவை உடனே வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். கையில் கட்டு போட்டுகொண்டு அவர் கமல்ஹாசன் முன்னிலையில் வந்து நின்றார். இது தவறான முடிவு என்று கமல் அவரை கண்டித்து வெளியில் அனுப்பியுள்ளார்.