மேடையில் கதறி அழுத கோபிநாத்- நெகிழ்ச்சி சமபவம்

கோபிநாத் இவரை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவிற்கு தன் நிகழ்ச்சி தொகுத்து கொடுப்பதன் மூலம் பிரபலமானவர்.

இவர் தொகுத்து வழங்கு நீயா நானா நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பிரபலம், நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சி பேசும்.

அந்த வகையில் கோபிநாத் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அதில் இவருக்கு சிறப்பு விருது ஒன்றும் வழங்கினார்.

அதை தொடர்ந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரின் தந்தையை மேடைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் கோபிநாத் கண்ணீர் விட்டு அழத்தொடங்கி விட்டார், பிறகு அவரை கண்ட்ரோல் செய்யவே சில நிமிடங்களுக்கு மேல் ஆனாது.

இதுமட்டுமின்றி அவருடைய மனைவிக்கு மேடையிலேயே தன் காதலையும் சொல்ல, அரங்கமே கலகலப்பானது.

அதோடு அவருடன் மேடையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்க, சார் உங்கள் படத்தில் தானே காதல் காட்சிகள் நிறைய வரும் எனக்கு ஏதாவது சொல்லுங்கள் என கோபிநாத் திருப்பி கேட்க, எஸ்,ஜே,சூர்யா அட எனக்கு ஏது தெரியாதுங்க என சொல்லி கலகலப்பாக்கினார்.