பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்.. வனிதா கைது? விசாரணையில் திடீர் திருப்பம்

விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக உள்ள நடிகை வனிதா விஜயகுமாரை விசாரணை செய்ய செய்ய போலீசார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

வனிதா தன்னுடைய சொந்த மகள் ஜெயந்திகாவை கடத்திவிட்டார் என அவருடைய முன்னாள் கணவர் ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது விசாரணை நடந்து வருகிறது. வனிதாவின் வக்கீல்களும் பிக்பாஸ் சென்றுள்ளனர். மாலை அவரது மகளை பிக்பாஸ் வீட்டுக்குள் நேரில் வரவைத்து அவர் சொந்த விருப்பத்தில் வந்தாரா இல்லை கடந்தப்பட்டாரா என நேரில் கேட்கப்படும் என தெரிகிறது.