Raja Rani 2 Archana: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனா அந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
விஜய் டிவியின் ராஜா ராணி 2ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த வாரம் வில்லி அர்ச்சனாவின் வளைகாப்பு எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் ஹீரோவின் தம்பி ஆதி ஒரு பெண்ணை கர்பமாக்கிய விஷயம் தெரியவந்துவிடுகிறது. இந்த காட்சிகள் தான் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது அர்ச்சனா சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். அவரது திடீர் முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

அதற்கான காரணத்தை கூறிய அர்ச்சனா “வாழ்க்கை எல்லோருக்கும் ஆச்சர்யங்களை தந்துகொண்டே இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நேரம் வந்துவிட்டது. ஆம்.. ராஜா ராணி 2 நடிகர்கள் மற்றும் டீமை மிஸ் செய்வேன்.”
“உங்கள் ஆதரவோடு அடுத்த ப்ராஜெக்ட்டில் சந்திப்போம்” என அர்ச்சனா கூறி இருக்கிறார்.
