எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் உண்மை முகம்- எலிமினேட் ஆன ஸ்ரேயா பளீர்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அடுத்து யார் எலிமினேட் ஆவார்கள், ஆர்யா யாரை திருமணம் செய்துக்கொள்வார் என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்திருகின்றனர்.

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா எலிமினேட் ஆனார், அதை தொடர்ந்து இப்போது பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

அண்மையில் போட்டியிலிருந்து வெளியேறியவர் ஸ்ரேயா. சமாதானம் செய்த ஆர்யாவிடம் நீங்கள் எதுவும் கூறவேண்டாம். அதுதான் பெட்டர். நான் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவேன் என கூறிவிட்டு சென்றார்.

அதோடு ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. இதன் மூலம் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். பின் நிகழ்ச்சிகளை பற்றிய விஷயங்களையும் உள்ளே நடந்ததையும் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

அவர் இப்படி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, உள்ளே என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்களும் ஆவலாக தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர், தற்போது நான் இப்போது யாரையும் திருமணம் செய்ய போவதில்லை. திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்திலும் இல்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கூறியுள்ளார்.