ரசிகர்களுக்கே தெரியாமல் செம்பருத்தி சீரியலில் நடந்த மிகப்பெரிய மாற்றம்

சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் உண்டு. அதில் டிஆர்பியில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது செம்பருத்தி சீரியல் தான்.

வழக்கமாக சீரியல்களில் அடிக்கடி நடிகர் நடிகைகள் மாற்றப்படுவதை நாம் பார்த்திருப்போம். அவருக்கு பதில் இவர் என கூறி அதே கதாபாத்திரத்துடன் சீரியலை தொடர்வார்கள்.

ஆனால் செம்பருத்தி சீரியலில் இயக்குனரையே யாருக்கும் சொல்லாமல் மாற்றிவிட்டனர். இதுவரை இயங்கிவந்த சுலைமான் என்ற இயக்குனர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் நீராவிப் பாண்டியன் என்பவர் சீரியலை இயக்கி வருகிறார்.

ரகசியமாக நடந்த இந்த மாற்றம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் தான் தற்போது வரை இருந்துள்ளது.