செந்தில், ராஜலட்சுமி ஆசையை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்

தற்போதெல்லாம் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் எளிதில் மக்கள் மனதில் இடம்பிடித்துவிடலாம், அந்த அளவிற்கு ஒரு சூப்பர் ஹீரோக்களாக சிலரை ரியாலிட்டி ஷோக்கள் மாற்றி விடுகின்றது.

அப்படித்தான் ரியாலிட்டி ஷோவில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன், இவர் இன்று தான் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இதுவரை அவர்கள் ஒரு சினிமா பாடல் கூட பாடாமல் கிராமத்து பாடல்களையே பாடி அசத்தி வருகின்றனர் செந்தில் ராஜலட்சுமி.

அப்போது அவரிடம் ராஜலட்சுமி தன் மகனுக்கு, சொந்தகார பிள்ளை ஒருவனுக்கு நீங்கள் என்றால் உயிர். தேர்வுகள் நடைபெறுவதால் அவர்களால் இன்று உங்களை காண வர முடியவில்லை என்று கூறினார்.

உடனே சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எப்போது தேர்வுகள் முடியும் என்று கூறுங்கள், நான் அவர்களை சந்திக்கிறேன், படப்பிடிப்பில் இருந்தாலும் அங்கு அவர்களை வரவழைத்து பார்க்கிறேன் என்று கூறி ராஜலட்சுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.