ஆர்யா தற்போது பங்கேற்று வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்று சொல்லலாம்.
நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை, அந்த அளவிற்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு தினமும் ஒரு சிறப்பு விருந்தினர்கள் வந்துக்கொண்டே தான் உள்ளனர், சமீபத்தில் தான் சாந்தனு கூட வந்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்ட் வந்தது, இதனால் போட்டி பரபரப்பாக இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரேயா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தபிறகு ஆர்யா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஆனால் ஸ்ரேயா ஆர்யாவை பேசவிடாமல் நீங்கள் எதுவும் கூறவேண்டாம். அதுதான் பெட்டர். அப்போது தான் நான் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவேன்” என கூறி மற்றவர்களுக்கு பை சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.