யார் நீங்க? 40 வருடத்திற்கு முன்பே பதிலடி கொடுத்தவர் தான் தலைவர், சுவாரஸ்ய தகவல்

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நாயகன். இவர் படம் வருகின்றது என்றால் தமிழகமே திருவிழா தான். இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் தூத்துக்குடி சென்றார்.

அப்போது ஒரு இளைஞன் யார் நீங்க? என்று கேட்டார். உடனே அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. அதை தொடர்ந்து பல மீம்ஸுகள் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அதையும் பாசிட்டிவாக மாற்றினார்கள். ஆம், ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகும் போது முதல் காட்சியிலேயே கமல் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க?’ என்று தான் கேட்பார்.

அப்போது ஆரம்பித்தது ரஜினியின் ஆட்சி சினிமாவில், அதேபோல் நேற்றே ஆரம்பித்துவிட்டது அரசியலிலும் ரஜினியின் ஆட்சி என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.